Total Pageviews

Sunday, September 2, 2012

அன்ரொய்ட் இயங்கு தளம் பற்றி... தெரிந்து கொள்ளலாம் வாங்க...

உலகிலேயே சிறந்த மனிதனுக்கான விருதினை அள்ளி மனிதர்களில் சிறந்த மனிதன் என்ற உயரிய இடத்தினை மனிதர்கள் வழங்கும் அளவிற்கு மக்களின் தோள் கொடுக்கும் தோழனாய் இருக்கும் கணனிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இயங்குதளமே அன்ரொய்ட்.

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் அனுபவிக்கும் வகையில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தினால், எம்மவருக்கு இன்று சந்தையில் புதிய வரவு முதற்கொண்டு அதில் எது மக்களின் மனதை கொள்ளைகொள்ளுகின்றது என்பது வரையிலும் எளிதில் தெரிந்துகொள்ளும் வண்ணம் தம்மை தயார் நிலையிலேயே வைத்துள்ளனர்.

இருப்பினும் நம்மிடையே சர்வசாதாரணமாக உறவாடிக் கொண்டிருக்கும் சில விடயங்கள் பற்றி தெரியாமலேயே அவற்றுடன் உறவாடிக்கொண்டிருக்கின்றோம். அதில் ஒன்றுதான் இந்த 'அன்ரொய்ட்' இயங்குதளம். 

ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளுக்கான சிறந்த இயங்குதளம் எது என்றால் பள்ளிக் குழந்தைகள் போல ஒருமித்து அதிகமானோர் கூறும் பதில் அன்ரொய்ட். ஆனால் இந்த இயங்குதளம் தொடர்பான அடுத்தடுத்தடுத்த கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு தயாராக இருப்பவர்கள் வெகுசிலரே.

உண்மையில் இயங்குதளம் என்பது குறித்த ஒரு சாதனத்தின் உயிர் எனலாம். உடலிலிருந்து உயிர் நீங்கினால் அல்லது நீக்கினால் உடல் இயக்கம் பூச்சியமாகவிடும். இது போன்றே மேற்படி குறித்த சாதனங்களின் உயிர் நாடியாக இந்த இயங்குதளங்களும் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இயங்குதளமே அன்ரொய்ட் இயங்கு தளம்.

இவ்வியங்குதளத்தின் சொந்தக்காரன் இணையத்தில் தனக்கென தனியிடம் பதித்துள்ள தேடல் பொறி இணையத்தளமான கூகுள் நிறுவனமே. ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளின் அறிமுகத்தின் போதே கூகுள் நிறுவனம் அவற்றின் வளர்ச்சி பின்னாளில் அசாதரமாணமாக இருக்கும் என்பதனை உணர்ந்து அவற்றிற்கான சந்தையில் தம்மை நிலைபடுத்திக்கொள்ள தகுந்த தருணத்தை பார்த்துக்கொண்டிருந்தது. அப்போதே இந்த அன்ரொய்ட் இயங்குதளம் மூலம் நுழைவதே சிறந்த வழி எனக் கண்டுகொண்டு அன்ரொய்ட் இயங்குதளத்துடன் சேர்ந்து கூகுள் நிறுவனமும் 2007 நவம்பர் 5ஆம் திகதி சந்தையில் அறிமுகமானது.

அன்ரொய்ட் இன்க் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு பின்னர் கூகுள் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு அண்மையில் கூகுளினினால் நிர்வகிக்கப்படும் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணினிகளுக்கென பிரத்தியேகமாக லினக்ஸ் கேணல் அடிப்படையில் ஜாவா மொழியில் எழுதக் கூடிய ஒரு திறந்த மூல (Open Source) இயங்கு தளமே அன்ரொய்ட்.

ஓப்பன் சோர்ஸ் இயங்கு தளம் என்பனால் இலகுவில் வளர்ச்சியடையக்கூடிய சாதக தன்மையை அன்ரொய்ட் கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் 'Apps' எனக் கூறப்படும் 450 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்ளிகேசன்களை கூகுள் நிறுவனத்தினால்; நிருவகிக்கப்படும் அன்ரொய்ட் மார்க்கெட் எனும் இணையத்தளத்தில் இன்று தரவிறக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.

இவ்விணையத்தளத்தில் சில எப்ஸ் இலவசமாகவும் சில எப்ஸ் கட்டணத்திற்கும் பெறக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அன்ரொய்ட் இயங்கு தளத்தினை கொண்ட சாதனங்களை பயன்படுத்த அன்ரொய்ட் மார்க்கட்டில் இணைய வேண்டும். அவ்வாறு இணையும் பட்சத்திலே அங்கே காணப்படும் எப்ஸ்களை தரவிறக்க முடியும்.

பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் எப்ஸ் பயனருக்கு பிடிக்கவில்லையாயின் கொள்வனவு செய்து 15 நிமிடத்திற்குள் எப்ஸ் இனை திருப்பிச்செலுத்தி பணத்தினையும் மீளப்பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த எபஸ்களை அன்ரொய்ட் மார்க்கெட்டில் மட்டுமல்லாது மூன்றாம் தரப்பு இணையத்தளங்களிலும் பெறலாம்.

இவ்வாறு பயனருக்கு இலகு வழிகளை ஏற்படுத்தியுள்ளதனால் தற்போதைய நிலவரத்தின் படி ஒரு நாளைக்கு 850 ஆயிரத்திற்கு மேற்பட்ட அன்ரொய்ட் சாதனங்கள் புதிதாக செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே அன்ரொய்ட் ஏற்படுத்தியிருக்கும் அதன் தேவையை சற்று எண்ணிப்பாருங்கள். காரணம் கணனிகளுக்கான இயங்கு தளமும் இதே ஓப்பன் சோர்ஸ் மூலமே திருங்கள் மேற்கொள்ளப்படும் லினக்ஸ் இயங்கு தளத்தின் பயனர்கள் வெறும் 5% ஆனோரே. 

ஏ.ஆர்.எம், எம்.ஐ.பி.எஸ், X86 போன்ற வன்பொருள் ஆதாரத்திற்கு ஆதரவளிக்கும் அன்ரொய்ட் இயங்குதளமானது. பீட்டா பதிப்பிலிருந்து தற்போது ஐஸ் கிரீம் சேன்விச் 4.0.3 பதிப்பு வரையிலும் பயனர்களின் தேவைக்கேற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் ஜெல்லி பீன்  எனும் ஒரு புதிய பதிப்பை அஸுஸ் ஸ்மார்ட் போனில் முதன்முறையாக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியான ஒவ்வொரு பதிப்பும் அதன் முன்னைய பதிப்பின் குறைபாடுகள் பலவற்றை திருத்தம் செய்தே வெளியானது.

வெளிவரும் புதிய பதிப்புக்களை நினைத்தவுடன் பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியாது. பயனர்கள் கைவசம் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது டெப்லட் கணனி மாதிரிக்கு குறித்த நிறுவனங்கள் புதிய பதிப்பின் வசதியினை வழங்கும் போதே இதனை பழைய பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியும்.

இது வரையில் வெளியான அன்ரொய்ட இயங்கு தளத்தின் குறிப்பிடத்தக்க பதிப்புகளாக அன்ரொய்ட் 1.0, கப் கேக் (அன்ரொய்ட் 1.5), டொனட் (அன்ரொய்ட் 1.6), ஈகிளயர் (அன்ரொய்ட் 2.0, 2.1), புரொயோ (அன்ரொய்ட் 2.2), ஜின்ஜர்பிறட் (அன்ரொய்ட் 2.3), கொனிகொம்ப் (அன்ரொய்ட் 3.0), ஐஸ் கிரீம் சேன்விச் (அன்ரொய்ட் 4.0) வெளிவந்துள்ளது. பதிப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் கூகுள் இனிப்பான உணவின் பெயர்களையே சூட்டிவருகின்றது. 

இவ் அன்ரொய்ட் இயங்கு தளத்தின் மூலம் பயனர்கள் அனுபவிக்ககூடிய பல வசதிகள் ஏனைய இயங்கு தளத்திலிருந்து சற்று மேம்பட்டதாக உள்ளது. தற்போதுள்ள அன்ரொய்ட் இயங்குதளத்திலுள்ள விஷேட அம்சங்களாக 
*** இதன் ப்ளட் போம் பெரிய அளவு வீ.ஜி.ஏ, 2டி, 3டி போன்றவற்றிற்கு இணங்கும் வண்ணம் அமைந்துள்ளமை
*** அதிகளவிலான கோப்புகளை சேகரிக்கக்கூடிய வசதி
*** குறுந்தகவலிற்கு (SMS) புதிய உருவம் கொடுத்துள்ளது. த்ரட்டட் (threaded SMS) எனப்படும் நவீன குறுந்தகவல் அனுப்பும் முறையில் செயற்படும் தன்மை.
*** க்ளௌட் தொழில்நுட்பம் (Cloud Technology) அறிமுகம் செய்யப்பட்டது.
*** GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS, Bluetooth, Wi-Fi, LTE, NFC and WiMAX போன்ற தொடர்பாடல் முறைமைகளுக்கு ஆதரவளிக்கும் திறன்
*** அதிக மொழிகளுக்கு இணங்கும் ஆற்றல்
*** Multi touch மற்றும் Multi task முறையை கையாளக்கூடிய வசதி
*** ஜாவாவிற்கு இசைவதுடன் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வீ.எம் அமுலாக்கத்தை சிறப்பாகக் கொண்டுள்ளது.
*** WebM, H.263, H.264 (3GP இல் அல்லது MP4), MPEG-4 SP, AMR, AMR-WB, AAC, HE-AAC(MP4 இல் அல்லது 3GP), MP3, MIDI, OGG வோர்பிஸ், WAV, JPEG, PNG, GIF, BMP போன்ற வடிவங்களுக்கு ஆதரவளிக்கின்து
*** திறந்த மூல வெப்கிட் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண் உலவி காணப்படுகின்றது. அசிட்3 சோதனையில் இந்த உலவி 93/100 மதிப்பெண்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது
*** வீடியோ/நிழற்பட கேமராக்கள், தொடுதிரைகள், ஜிபிஎஸ், வேக அளமானிகள், காந்தவியல்மானிகள், (வன்பொருள் திசைஅமைவு, வரிசை படுத்துதல், பிக்சல் வடிவ நிலைமாற்றத்துடன்) துரிதப்படுத்தப்பட்ட 2டி பிட் பிலிட்கள் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட 3டி கிராபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளமை
*** ஸ்க்ரீன் சொட் வசதி
*** குரல் வளி கட்டளை வசதி
என இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை அன்ரொய்ட் இயங்குதளம் கொண்டுள்ளமையால் ஏனைய இயங்கு தளத்துடன் இருந்து சற்று விலகி மேம்பட்ட ஒரு இயங்கு தளமாகவே இது காணப்படுகிறது.

பயனர்களின் தேவைகள் பலவற்றை உணர்ந்து அதற்கேற்ற வகையில் பல உத்திகளின் மூலம் நிறைய வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்த போதும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.
*** தற்போது அன்ரொய்ட் இயங்குதளமானது, அனிமேட்டட் .gif கோப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை
*** ஜாவா SE மற்றும் ME போன்ற நிலைநாட்டப்பட்ட ஜாவா தரங்களை பயன்படுத்துவதில்லை. ஜாவா இயங்கு தளங்களுக்காக மற்றும் அன்ரொய்ட் இயங்கு தளங்களுக்காக எழுதப்பட்ட ஜாவா பயன்பாடுகள் பலவற்றுள் ஒத்தியல்பைத் தடுக்கிறது
*** உள்ளார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகள காரணமாக, ஒரு SD கார்டில் இருந்து பயன்பாடுகளை நிறுவதற்கு அன்ரொய்ட் அதிகாரபூர்வமாக இடமளிப்பதில்லை, அதுமட்டுமல்லாமல் இயக்கவும் இடமளிப்பதில்லை
*** அன்ரொய்ட் பல்வேறு பதிப்புகளில் வேலை செய்யும் பயன்பாடுகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என உருவாக்குனர்கள் தெரிவித்தனர், ஏனெனில் பதிப்புகள் 1.5 மற்றும் 1.6க்கு இடையே பல்வேறு தகுதியுடைமை பிரச்சினைகள் உள்ளன.

இது போன்ற மேலும் சில குறைபாடுகளுடன் இந்த அன்ரொய்ட் இயங்கு தளம் காணப்பட்டபோதும் மிகப்பெரியளவில் இன்று மக்களை தன்வசம் ஈர்த்துள்ளது. 
மேலும் இவ்வியங்கு தளமானது ஓப்பன் சோர்ஸ் என்பதனால் விரைவில் குறித்த குறைபாடுகளை அடுத்தடுத்த பதிப்புக்களில் திருத்தம் செய்து வெளிவரும் என நம்பலாம்.

இன்றைய தலைமுறையினரின் உள்ளங்கவர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் போன்ற இலத்திரனியல் சாதனங்களில் இவ் அன்ரொய்ட் இயங்கு தளத்தினையே பெரிதும் எதிர்ப்பார்ப்பதனால் வரும் நாட்களில் தற்போதைய இடத்தினை விட மிகப் பெரும் இடத்தினை தக்க வைக்கும் ஆற்றல் அன்ரொய்ட் இற்கு உண்டு என்பதனால் பயனர்கள் அனைவரும் முடிந்தளவு இவ்வியங்குதளத்தின் சாதக பாதக நிலைமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் இதனை அனுபவித்து மகிழலாமே...!

ஏ.எம்.ஆர்


Android
 is a Linux-based operating system designed primarily for touchscreen mobile devices such as smartphones and tablet computers, developed by Google in conjunction with the Open Handset Alliance. Initially developed by Android Inc, whom Google financially backed and later purchased in 2005, Android was unveiled in 2007 along with the founding of the Open Handset Alliance, a consortium of 86 hardware, software, andtelecommunication companies devoted to advancing open standards for mobile devices.
Google releases the Android code as open-source, under the Apache License. The Android Open Source Project (AOSP), lead by Google, is tasked with the maintenance and further development of Android. Additionally, Android has a large community of developers writing applications ("apps") that extend the functionality of devices. Developers write primarily in a customized version of Java, and apps can be downloaded from online stores such as Google Play (formerly Android Market), the app store run by Google, or third-party sites. In June 2012, there were more than 600,000 apps available for Android, and the estimated number of applications downloaded from Google Play was 20 billion.
The first Android-powered phone was sold in October 2008, and by the end of 2010 Android had become the world's leading smartphone platform. It had a worldwide smartphone market share of 59% at the beginning of 2012, and as of third quarter 2012, there were 500 million devices activated and 1.3 million activations per day.

Android, Inc. was founded in
 Palo Alto, California, United States in October 2003 by Andy Rubin (co-founder of Danger), Rich Miner (co-founder of Wildfire Communications, Inc.), Nick Sears (once VP at T-Mobile), and Chris White (headed design and interface development at WebTV) to develop, in Rubin's words "...smarter mobile devices that are more aware of its owner's location and preferences". Despite the obvious past accomplishments of the founders and early employees, Android Inc. operated secretly, revealing only that it was working on software for mobile phones. That same year, Rubin ran out of money. Steve Perlman, a close friend of Rubin, brought him $10,000 in cash in an envelope and refused a stake in the company.
Google acquired Android Inc. on August 17, 2005, making Android Inc. a wholly owned subsidiary of Google. Key employees of Android Inc., including Andy Rubin, Rich Miner and Chris White, stayed at the company after the acquisition. Not much was known about Android Inc. at the time of the acquisition, but many assumed that Google was planning to enter the mobile phone market with this move.
At Google, the team led by Rubin developed a mobile device platform powered by the Linux kernel. Google marketed the platform to handset makers and carriers on the promise of providing a flexible, upgradable system. Google had lined up a series of hardware component and software partners and signaled to carriers that it was open to various degrees of cooperation on their part.
Speculation about Google's intention to enter the mobile communications market continued to build through December 2006. Reports from the BBCand The Wall Street Journal noted that Google wanted its search and applications on mobile phones and it was working hard to deliver that. Print and online media outlets soon reported rumors that Google was developing a Google-branded handset. Some speculated that as Google was defining technical specifications, it was showing prototypes to cell phone manufacturers and network operators. In September 2007, Information Week covered an Evalueserve study reporting that Google had filed several patent applications in the area of mobile telephony.
On November 5, 2007, the Open Handset Alliance, a consortium of technology companies including Google, device manufacturers such as HTC and Samsung, wireless carriers such as Sprint Nextel and T-Mobile, and chipset makers such as Qualcomm and Texas Instruments, unveiled itself. The goal of the Open Handset Alliance is to develop open standards for mobile devices. On the same day, the Open Handset Alliance unveiled Android as its first product, a mobile device platform built on the Linux kernel version 2.6.
The first commercially available phone to run Android was the HTC Dream, released on October 22, 2008. In early 2010 Google collaborated with HTC to launch its flagship Android device, the Nexus One. This was followed later in 2010 with the Samsung-made Nexus S and in 2011 with the Galaxy Nexus.


##This is a list of features in the 
Android operating system:
Handset layouts
The platform is adaptable to larger, VGA, 2D graphics library, 3D graphics library based on OpenGL ES 2.0 specifications, and traditional smartphone layouts.
Storage
SQLite, a lightweight relational database, is used for data storage purposes.
Connectivity
Android supports connectivity technologies including GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS, Bluetooth, Wi-Fi, LTE, NFC and WiMAX.
Messaging
SMS and MMS are available forms of messaging, including threaded text messaging and Android Cloud To Device Messaging (C2DM) and now enhanced version of C2DM, Android Google Cloud Messaging (GCM) is also a part of Android Push Messaging service.
Multiple language support
Android supports multiple languages.
Web browser
The web browser available in Android is based on the open-source WebKit layout engine, coupled with Chrome's V8 JavaScript engine. The browser scores 100/100 on the Acid3 test on Android 4.0.
Java support
While most Android applications are written in Java, there is no Java Virtual Machine in the platform and Java byte code is not executed. Java classes are compiled into Dalvik executables and run on Dalvik, a specialized virtual machine designed specifically for Android and optimized for battery-powered mobile devices with limited memory and CPU. J2ME support can be provided via third-party applications.
Media support
Android supports the following audio/video/still media formats: WebM, H.263, H.264 (in 3GP or MP4 container), MPEG-4 SP, AMR, AMR-WB (in 3GP container), AAC, HE-AAC (in MP4 or 3GP container), MP3, MIDI, Ogg Vorbis, FLAC, WAV, JPEG, PNG, GIF, BMP, WebP.
Streaming media support
RTP/RTSP streaming (3GPP PSS, ISMA), HTML progressive download (HTML5 <video> tag). Adobe Flash Streaming (RTMP) and HTTP Dynamic Streaming are supported by the Flash plugin. Apple HTTP Live Streaming is supported by RealPlayer for Android, and by the operating system in Android 3.0 (Honeycomb).
Additional hardware support
Android can use video/still cameras, touchscreens, GPS, accelerometers, gyroscopes, barometers, magnetometers, dedicated gaming controls, proximity and pressure sensors,thermometers, accelerated 2D bit blits (with hardware orientation, scaling, pixel format conversion) and accelerated 3D graphics.
Multi-touch
Android has native support for multi-touch which was initially made available in handsets such as the HTC Hero. The feature was originally disabled at the kernel level (possibly to avoid infringing Apple's patents on touch-screen technology at the time). Google has since released an update for the Nexus One and the Motorola Droid which enables multi-touch natively.
Bluetooth
Supports A2DP, AVRCP, sending files (OPP), accessing the phone book (PBAP), voice dialing and sending contacts between phones. Keyboard, mouse and joystick (HID) support is available in Android 3.1+, and in earlier versions through manufacturer customizations and third-party applications.
Video calling
Android does not support native video calling, but some handsets have a customized version of the operating system that supports it, either via the UMTS network (like the Samsung Galaxy S) or over IP. Video calling through Google Talk is available in Android 2.3.4 and later. Gingerbread allows Nexus S to place Internet calls with a SIP account. This allows for enhanced VoIP dialing to other SIP accounts and even phone numbers. Skype 2.1 offers video calling in Android 2.3, including front camera support. Users with the Google+ android app can video chat with other google+ users through hangouts.
Multitasking
Multitasking of applications, with unique handling of memory allocation, is available.
Voice based features
Google search through voice has been available since initial release. Voice actions for calling, texting, navigation, etc. are supported on Android 2.2 onwards. As of Android 4.1, Google has expanded Voice Actions with the ability to talk back and read answers from Google's Knowledge Graph when queried with specific commands. The ability to control hardware has not yet been implemented.
Tethering
Android supports tethering, which allows a phone to be used as a wireless/wired Wi-Fi hotspot. Before Android 2.2 this was supported by third-party applications or manufacturer customizations.
Screen capture
Android supports capturing a screenshot by pressing the power and volume-down buttons at the same time. Prior to Android 4.0, the only methods of capturing a screenshot were through manufacturer and third-party customizations or otherwise by using a PC connection (DDMS developer's tool). These alternative methods are still available with the latest Android.
External storage
Most Android devices include microSD slot and can read microSD cards formatted with FAT32, Ext3 or Ext4 file system. To allow use of high-capacity storage media such as USB flash drivesand USB HDDs, many Android tablets also include USB 'A' receptacle. Storage formatted with FAT32 is handled by Linux Kernel VFAT driver, while 3rd party solutions are required to handle other popular file systems such as NTFS, HFS Plus and exFAT.